கூட்டாளியாக இருக்க விரும்புகிறது இந்தியா- அமெரிக்கா கருத்து

சீனா இந்திய எல்லையில் வீரர்களின் எண்ணிக்கையை அதிகரித்து வரும் வேளையில் இந்தியா அமெரிக்காவின் கூட்டாளியாக இருக்க விரும்புகிறது என அமெரிக்க ஸ்டேட் செக்ரட்டரி மைக் பாம்பியோ அவர்கள் வெள்ளியன்று கூறியுள்ளார்.

இந்த சண்டையில் அமெரிக்காவின் துணையை இந்தியா நாடுகிறது என பாம்பியோ கூறியுள்ளார்.

டோக்கியோவில் தற்போது நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைக்கு பிறகு மைக் பாம்பியோ மற்றும் அமெரிக்க பாதுகாப்பு செயலர் மார்க் எஸ்பர் பேச்சுவார்த்தைக்காக இந்தியா வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
துணை ஸ்டேட் செயலர் ஸ்டீபன் பீகன் அவர்களும் இந்தியா வர உள்ளதாக தகலல்கள் வெளியாகியுள்ளது.

இந்திய சீனா இடையிலான எல்லை மோதல் போர் பதற்றமாக அதிகரித்து வரும் வேளையில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது.

சீனா தற்போது அதிக அளவிலான படைகளை இந்தியாவின் வடக்கு எல்லைக்கு நகர்த்தியுள்ளதாக மைக் பாம்பியோ அவர்கள் கூறியுள்ளார்.