Breaking News

சீன எல்லையில் ஏழு இடங்களில் எல்லையை கடந்த இந்திய இராணுவம்

  • Tamil Defense
  • October 17, 2020
  • Comments Off on சீன எல்லையில் ஏழு இடங்களில் எல்லையை கடந்த இந்திய இராணுவம்

இந்திய சீன எல்லையான LAC-ல் இந்திய இராணுவம் ஏழு இடங்களில் நுழைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.சீன இராணுவம் இந்திய எல்லைக்குள் நுழைந்ததற்கு பதிலடியாக இந்திய இராணுவமும் ஏழு இடங்களில் சீன எல்லைக்குள் நுழைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீனா இந்தியாவுடன் இன்னும் பேச்சுவார்த்தையில் ஈடுபட இதுவே காரணம் என அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.இந்தியா எடுத்த ஆக்சன் காரணமாகவே சீனா பேச்சுவார்த்தைக்கு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பங்கோங் ஏரியில் இந்தியா ஆக்கிரமித்த மலைப் பகுதியில் இருந்து இந்தியா வெளியேற மறுத்து விட்டது.மேலும் எல்லையில் இந்தியா ஏற்படுத்தி வரும் கட்டுமானங்களையும் நிறுத்த இந்தியா மறுத்துள்ளது.