அணுவை சுமந்து செல்லும் சௌரியா பலிஸ்டிக் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை

  • Tamil Defense
  • October 3, 2020
  • Comments Off on அணுவை சுமந்து செல்லும் சௌரியா பலிஸ்டிக் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை

அணுஆயுதம் ஏந்தி செல்லக்கூடிய சௌரியா பலிஸ்டிக் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக இன்று சோதனை செய்துள்ளது.அதிநவீன ரகமான இந்த ஏவுகணை 800கிமீ வரை உள்ள இலக்குகளை தாக்கியழிக்க வல்லது.

இது இலகுரகமாகவும் இயக்குவதற்கு எளிதாகவும் இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஒடிசாவின் ஒருங்கிணைந்த ஏவுகணை சோதனை தளத்தில் இருந்து இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சௌரியா குறித்து மேலதிக தகவல்கள்…:

சௌரியா கேனிஸ்டரில் வைத்து ஏவப்படக்கூடிய தரையில் இருந்து ஏவப்பட்டு தரை இலக்குகளை தாக்க வல்லது.ஹைப்பர் சோனிக் வேகத்தில் செல்லக்கூடியது.வெடிபொருளின் எடையை பொருத்து 1000கிமீ வரை செல்லக்கூடியது.

இலக்கை துல்லியமாக தாக்க கூடியது.அதாவது குறிப்பிட்ட இலக்கை நோக்கி செலுத்தப்பட்டால் இலக்கை சுற்றி 20மீ வட்டத்திற்குள் தாக்கும் அளவிற்கு துல்லியமானது.

காம்போசிட் கேனிஸ்டர்களில் இந்த ஏவுகணைகள் இருப்பதால் இவற்றை குறைந்த பராமரிப்புடன் நெடுங்காலம் சேமித்து வைத்து உபயோகிக்க முடியும்.

இதன் உட்சபட்ட வளைந்து நெளிந்து செல்லும் திறனும் ஹைபர்சோனிக் வேகமும் எதிரி வான் பாதுகாப்பு அமைப்புகளுக்கு சிம்மசொப்பனமே !