
அணுஆயுதம் ஏந்தி செல்லக்கூடிய சௌரியா பலிஸ்டிக் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக இன்று சோதனை செய்துள்ளது.அதிநவீன ரகமான இந்த ஏவுகணை 800கிமீ வரை உள்ள இலக்குகளை தாக்கியழிக்க வல்லது.
இது இலகுரகமாகவும் இயக்குவதற்கு எளிதாகவும் இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஒடிசாவின் ஒருங்கிணைந்த ஏவுகணை சோதனை தளத்தில் இருந்து இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.