பிரித்வி-2 பலிஸ்டிக் ஏவுகணை சோதனை

250கிமீ தூரத்திற்கு அப்பால் உள்ள இலக்குகளை தாக்க வல்ல பிரித்வி-2 பலிஸ்டிக் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.

ஒடிசா கடலோர பகுதியில் உள்ள பாலசோர் தீவில் இருந்து இந்த ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.இந்த ஏவுகணை நமது டிஆர்டிஓ மேம்படுத்தியது ஆகும்.

ஏற்கனவே இந்த ஏவுகணை நமது Strategic Forces Command-ல் இணைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எதிரி வான் பாதுகாப்பு அமைப்புகளை தகர்க்க வல்ல ருத்ரம் ஏவுகணை சோதனை மேற்கொள்ளப்பட்டு ஒரு வாரத்தில் இந்த பிரித்வி-2 ஏவுகணையை டிஆர்டிஓ சோதனை செய்துள்ளது.

பிரம்மோஸ்,ஸ்மார்ட்,ருத்ரம் என இந்தியா தொடர் ஏவுகணை சோதனைகளை இந்தியா நடத்தி வருகிறது.