
SANT எனப்படும் டேங்க் எதிர்ப்பு ஏவுகணை ஒன்றை வெற்றிகரமாக இந்தியா சோதனை செய்துள்ளது.அக்டோபர் 20 அன்று இந்த ஏவுகணை வெற்றிகரமாக ஒடிசா கடலோர பகுதியில் சோதனை செய்யப்பட்டுள்ளது.
இந்திய விமானப்படைக்காக இந்த ஏவுகணையை டிஆர்டிஓ மேம்படுத்தியுள்ளது.ஏவிய பிறகு இலக்கை லாக் செய்வது மற்றும் ஏவுவதற்கு முன் இலக்கை லாக் செய்வது எனும் திறமையை இந்த ஏவுகணை பெற்றுள்ளது.
இதற்கு முன் இந்திய கடற்படை ஐஎன்எஸ் சென்னை போர்க்கப்பலில் இருந்து பிரம்மோஸ் ஏவுகணையை வெற்றிகரமாக ஏவி பரிசோதனை செய்தது.ஏவுகணை இலக்கை துல்லியமாக தாக்கியது.