இங்கிலாந்துடன் தளவடாங்கள் பரிமாற்ற ஒப்பந்தம்-விரைவில் கையெழுத்து

  • Tamil Defense
  • October 9, 2020
  • Comments Off on இங்கிலாந்துடன் தளவடாங்கள் பரிமாற்ற ஒப்பந்தம்-விரைவில் கையெழுத்து

பாதுகாப்பு தொடர்பான தளவாடங்களை இரு நாடுகளும் பறிமாறிக்கொள்ளுதல் தொடர்பான ஒப்பந்தம் ஒன்றை இந்தியா மற்றும் இங்கிலாந்து இணைந்து விரைவில் மேற்கொள்ள உள்ளன.

இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் இதுபோன்ற ஒப்பந்தங்கள் மேற்கொள்வதன் மூலம் இந்திய கடற்படை கப்பல்கள் நெடுந்தூர ஆதிக்கம் செலுத்த முடியும்.

எரிபொருள்,உதிரி பாகங்கள் மற்றும் சப்ளை ஆகியவற்றிற்காக இரு நாடுகளும் தங்கள் தளங்களை பரிமாறிக் கொள்ளும்.

இது போன்றதொரு ஒப்பந்தத்தை இந்தியா ஏற்கனவே ஆறு நாடுகளுடன் ஏற்படுத்திக் கொண்டுள்ளது.இதுபோன்ற ஒப்பந்தங்கள் மூலம் தற்போது இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் ரீயூனியன் தீவு முதல் டிஜிபௌட்டி வரை, சலாலா முதல் குவாம் வரை இந்திய கடற்படை அணுக முடியும்.

அமெரிக்கா,பிரான்ஸ்,சிங்கப்பூர்,தென் கொரியா,ஆஸ்திரேலியா மற்றும் ஐப்பான் ஆகிய நாடுகளுடன் இதுபோன்றதொரு பரிமாற்ற ஒப்பந்தத்தை இந்தியா ஏற்படுத்திக்கொண்டுள்ளது.இரஷ்யாவுடன் இது போன்றதொரு ஒப்பந்தம் மேற்கொள்ள பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.