
மொத்த அணுஆயுத தவிர்ப்பு என்ற சர்வதேச தினத்தன்று ஐநாவில் பேசிய இந்தியா ” முதலில் அணுஆயுதங்களை பயன்படுத்தமாட்டோம்” என்ற தனது கொள்கையை உறுதிபட கூறியுள்ளது.
இந்தியாவின் வெளியுறவு செயலர் ஹர்ஷ் ஸ்ரிங்காலா கூறுகையில் அணுஆயுத நாடுகள் மீது முதலில் தாக்குவதில்லை என்ற கொள்கையும் அணுஆயுதமற்ற நாடுகளின் மீது அணுஆயுத தாக்குதல் நடத்த மாட்டோம் என்ற கொள்கையும் கடைபிடித்து வருவதை கூறியுள்ளார்.
1998 பொக்ரான் அணுசோதனைக்கு பிறகு இந்தியா முதலில் தாக்க மாட்டோம் என்ற கொள்கையை பின்பற்றி வருகிறது.ஆனால் பாக் அவ்வாறு எந்த கொள்கையும் தற்போது வரை பின்பற்றவில்லை.