125 ஐந்தாம் தலைமுறை விமானங்கள் இணைக்க திட்டம்: விமானப்படை

  • Tamil Defense
  • October 8, 2020
  • Comments Off on 125 ஐந்தாம் தலைமுறை விமானங்கள் இணைக்க திட்டம்: விமானப்படை

அடுத்த பத்து ஆண்டுகளில் 125 அதிநவீன தாக்கும் விமானங்களை படையில் இணைக்க திட்டமிட்டுள்ளது விமானப்படை.

இந்தியா தற்போது ஐந்தாம் தலைமுறை விமானத்தை மேம்படுத்தி வருகிறது.அடுத்த பத்து ஆண்டுகளில் இரு வகைகளில் சுமார் ஏழு ஸ்குவாட்ரான்கள் இணைக்கத் திட்டமிட்டுள்ளது விமானப்படை.

முதல் இரு ஸ்குவாட்ரான்கள் அமெரிக்கத் தயாரிப்பு என்ஜின்களுடன் இருக்கும் எனவும் மற்ற ஐந்து ஸ்குவாட்ரான்கள் இந்தியத் தயாரிப்பு என்ஜின் உடன் இருக்கும்.

இது தவிர 83 தேஜஸ் மார்க் 1ஏ விமானங்கள் இந்த வருட இறுதியில் ஆர்டர் செய்யப்பட உள்ளன.2023க்குள் ஆர்டர் செய்யப்பட்டுள்ள 36 விமானங்களும் முழுதாக இந்திய விமானப்படையில் இணையும்.

2027ல் இந்தியாவின் ஐந்தாம் தலைமுறை விமானமான ஏஎம்சிஏ 2027ல் முதல் பறப்பை மேற்கொள்ளும்.