OFB தயாரிப்பு கார்பைன் துப்பாக்கிகள் வாங்க இராணுவம் பரிசீலனை

  • Tamil Defense
  • October 7, 2020
  • Comments Off on OFB தயாரிப்பு கார்பைன் துப்பாக்கிகள் வாங்க இராணுவம் பரிசீலனை

இந்தியாவின் ஆர்டினன்ஸ் தொழில்சாலை தயாரிப்பு கார்பைன் துப்பாக்கிகளை இந்திய இராணுவம் வாங்க பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

“5.56மிமீ குண்டுகளை சுடக்கூடிய கார்பைன் துப்பாக்கிகளை அவசரமாக வாங்க இந்திய இராணுவம் கருத்தில் கொண்டுள்ளது.இந்த துப்பாக்கிகளை லடாக் பிராந்தியத்தில் உள்ள வீரர்களுக்கு வழங்கவும் உள்ளது” என அரசுத் தரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.

1990 இறுதி முதல் ஆர்டினன்ஸ் தொழிற்சாலைகள் தான் இராணுவத்திற்கு தாக்கும் துப்பாக்கிகள் வழங்கும் பிரதான நிறுவனமாக இருந்துள்ளது.

இந்திய இராணுவத்திற்கு கிட்டத்தட்ட 50000 துப்பாக்கிகள் தற்போது தேவையாக உள்ளது.

இது தவிர சுமார் 95,000 Caracal carbine துப்பாக்கிகள் ஐக்கிய அரபு அமீரகத்திடம் இருந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தாலும் இன்னும் முடிவுகள் எடுக்கப்படவில்லை.