மேலதிக ஐந்து நேத்ரா அவாக்ஸ் விமானங்கள் வாங்க திட்டம்

  • Tamil Defense
  • October 9, 2020
  • Comments Off on மேலதிக ஐந்து நேத்ரா அவாக்ஸ் விமானங்கள் வாங்க திட்டம்

இந்திய விமானப்படை மேலதிக அவாக்ஸ் விமானங்களை வாங்க திட்டமிட்டுள்ளதாம விமானப்படை தளபதி பதாரியா அவர்கள் தெரிவித்துள்ளார்.தற்போத இந்திய விமானப்படையில் மிக குறைவான அவாக்ஸ் விமானங்களே உள்ளன.இரு முனை போரை எதிர்கொள்ள இந்த எண்ணிக்கை போதாது.

Airbus C295 விமானத்தை அடிப்படையாக கொண்டு டிஆர்டிஓ தயாரித்த AEW&CS அமைப்பை இணைத்து புதிய அவாக்ஸ் விமான வகை தயாரிக்க திட்டமிடப்பட்டிருந்தாலும் தற்போது Embraer ERJ145 விமானத்தில் அவாக்ஸ் அமைப்பை இணைத்து ஐந்து விமானங்கள் பெறப்பட உள்ளதாக தளபதி கூறியுள்ளார்.

எம்பரேயர் விமான நிறுவனம் லஞ்ச புகாரில் சிக்கியதில் இருந்து அதனிடம் மேலதிக விமானங்கள் பெறும் திட்டம் நிறுத்தப்பட்டது எனினும் தற்போது செயல்பாட்டில் உள்ள அவாக்ஸ் விமானங்களுக்கு எம்பரேயர் தான் உதிரிபாகங்கள் மற்றும் உதவி அளித்து வருகிறது.

தற்போது இந்திய விமானப்படையில் அவாக்ஸ் விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சிகள் நடைபெற்று வருகிறது.இவை பறக்கும் ரேடார்கள் என அழைக்கப்படுகின்றன.