சைபர் பாதுகாப்பு-இந்தியா ஜப்பான் இணைந்து செயல்பட முடிவு

  • Tamil Defense
  • October 8, 2020
  • Comments Off on சைபர் பாதுகாப்பு-இந்தியா ஜப்பான் இணைந்து செயல்பட முடிவு

5ஜி தொழில்நுட்பம் மற்றும் முக்கிய தகவல்கள் கட்டமைப்பு போன்ற துறைகளில் இணைந்து செயல்பட மிக முக்கியான சைபர் பாதுகாப்பு ஒப்பந்தம் ஏற்படுத்த இரு நாடுகளும் முடிவு செய்துள்ளன.

இது தவிர செயற்கை நுண்ணறிவு துறையிலும் இணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது தவிர இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தை முறியடித்து திறந்த வெளிப்படையான பிராந்தியமாக மாற்ற நால்வர் கூட்டனி இணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது.

டோக்கியோவில் நடைபெற்ற சந்திப்பிற்கு இந்த தகவலை ஜப்பான் வெளியிட்டுள்ளது.ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுகா, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்க செயலர் மைக் பாம்பியோ மற்றும் ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் மாரிஸ் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.