இரஷ்யாவிடம் இருந்து இலகுரக டேங்குகள் வாங்க பேச்சுவார்த்தை

  • Tamil Defense
  • October 5, 2020
  • Comments Off on இரஷ்யாவிடம் இருந்து இலகுரக டேங்குகள் வாங்க பேச்சுவார்த்தை

கிழக்கு லடாக் பகுதி போன்ற உயர் மலை பகுதியில் போரிட ஏற்ற இலகுரக டேங்குகளை இரஷ்யாவிடம் இருந்து பெற பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Sprut SDM1 என்ற இலகுரக டேங்குகளை அவசரமாக பெறுவது குறித்து பேச்சுவார்த்தை கடந்த ஜீலை முதல் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

சீன எல்லையில் மோதல் ஏற்பட தொடங்கிய பிறகு இது போன்ற டேங்குகளுக்கான அவசர தேவை உணரப்பட்டது.சீனாவும் டி-15 இலகு ரக டேங்குகளை தற்போது எல்லையில் நிலைநிறுத்தியுள்ளது.

இந்த புதிய டேங்குகள் தற்போது இரஷ்யாவில் சோதனையில் உள்ளன.முதல் தொகுதியாக சுமார் 24 டேங்குகள் பெறப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.சுமார் 500 கோடியில் இந்த டேங்குகள் பெறப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த Sprut SDM1 இலகுரக டேங்க் டி-72 மற்றும் டி90 டேங்குகளுடன் ஒத்துபோகும் என்பதால் இவற்றை இயக்குவதற்கு வீரர்களுக்கு எளிதாக அல்லது குறைந்த பட்ச பயிற்சியே தேவைப்படும்.
இதில் 125மிமீ துப்பாக்கி உள்ளது.இது அனைத்து ரக குண்டுகளையும் வீசக்கூடியது.