சி-130ஜே விமானங்களுக்கு உதிரி பாகங்கள் வழங்க அமெரிக்கா அனுமதி

  • Tamil Defense
  • October 2, 2020
  • Comments Off on சி-130ஜே விமானங்களுக்கு உதிரி பாகங்கள் வழங்க அமெரிக்கா அனுமதி

இந்திய விமானப்படையில் உள்ள சி-130ஜே விமானங்களுக்கு உதிரி பாகங்கள் மற்றும் லாஜிஸ்டிக் உதவிகள் வழங்க பெண்டகன் அனுமதி வழங்கியுள்ளது.சுமார் 90மில்லியன் டாலர்களுக்கு இந்த தளவாடங்கள் பெறப்பட உள்ளன.

இதன் மூலம் இந்திய விமானப்படை இந்த சி-130ஜே சூப்பர் ஹெர்குலிஸ் விமானங்களை எப்போதுமே செயல்பாட்டில் வைத்திருக்க முடியும்.தற்போது இந்திய விமானப்படை ஐந்து சி-130ஜே விமானங்களை இயக்கி வருகிறது.மேலும் ஆறு விமானங்கள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன.

மிக கடினமான முன்னனி வான் தளங்களில் கூட இயங்க வல்ல இந்த விமானங்கள் இந்திய விமானப்படைக்கு அனைத்து வகையிலும் பயனுள்ளதாக உள்ளது.