
சில நாட்களுக்கு முன் தான் இந்திய இராணுவ தளபதி முகுந்த் நரவனே மற்றும் வெளியுறவு செயலர் ஹர்ஸ் வர்தன் ஆகியோர் மியான்மர் நாட்டிற்கு பயணம் செய்தனர்.இந்த சந்திப்பின் போது மியான்மர் நாட்டிற்கு இராணுவ தளவாடங்கள் வழங்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது.
ஆர்டில்லரி துப்பாக்கிகள், டி-72 டேங்குகளுக்கான குண்டுகள்,ரேடார்கள்,சோனார்கள் மற்றும் 500 குண்டுதுளைக்காத உடைகள் ஆகியவை வழங்க இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது.
மியான்மரில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வருகிறது.சீனாவும் இந்தியாவை சுற்றியுள்ள நாடுகளுக்கு ஆயுதங்கள் வழங்குவதன் மூலம் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட முயற்சித்து வருகிறது.
கடந்த சில வருடங்களில் வங்கதேச கடற்படைக்கு நீர்மூழ்கி கப்பல்கள் மற்றும் போர்க்கப்பல்கள் என வழங்கியுள்ளது.
இவற்றை முறியடிக்க பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வருகிறது.மியான்மருக்கு இந்தியா ஒரு நீர்மூழ்கி வழங்கி உள்ளது.