பிரான்சில் விமானப்படை குழு-மேலும் ரபேல் விமானங்கள் இணைக்க திட்டம்

  • Tamil Defense
  • October 15, 2020
  • Comments Off on பிரான்சில் விமானப்படை குழு-மேலும் ரபேல் விமானங்கள் இணைக்க திட்டம்

இந்தியா இரண்டாவது தொகுதி ரபேல் விமானங்களை படையில் இணைக்க தயாராகி வரும் வேளையில் இந்திய விமானப்படை குழு ஒன்றை பிரான்சிற்கு அனுப்பியுள்ளது.இந்த குழு அங்கு பயிற்சி பெறும் இந்திய விமானிகள் குழுவை சந்தித்து பேசியுள்ளது.

அடுத்த நான்கு வாரங்களில் இரண்டாம் தொகுதி ரபேல் விமானங்கள் இந்தியா வர உள்ளது.தற்போது முதல் தொகுதி ஐந்து விமானங்கள் வெற்றிகரமாக படையில் இணைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி முதலே பல இந்திய விமானப்படை குழு பிரான்ஸ் சென்று ரபேல் புரோஜெக்ட் குறித்து கேட்டறிந்து வந்துள்ளன.இந்திய நிலைக்கு ஏற்ப ரபேல் விமானங்களில் செய்யப்படும் மாற்றங்கள் குறித்தும் கேட்டறிந்து வந்துள்ளன.

அனைத்து 36 விமானங்களும் 2023க்குள் இந்திய விமானப்படையில் இணைக்கப்படும்.சுகாய் விமானங்களுக்கு பிறகு 23 வருடங்களில் புதிய ரக விமானங்கள் படையில் இணைக்கப்பட்டது இதுவே முதல் முறை ஆகும்.