ஸ்வார்ம் ட்ரோன்கள் தொழில்நுட்ப மேம்பாடு: விமானப்படை தளபதி புதிய தகவல்

  • Tamil Defense
  • October 6, 2020
  • Comments Off on ஸ்வார்ம் ட்ரோன்கள் தொழில்நுட்ப மேம்பாடு: விமானப்படை தளபதி புதிய தகவல்

எதிர்காலத்திற்கு தேவையான முக்கியமான தொழில்நுட்ப மேம்பாடுகளை இந்தியா தொடங்கியுள்ளதாக விமானப்படை தளபதி அவர்கள் கூறியுள்ளார்.லேசர் போன்ற நேரடி சக்தி ஆயுதம், ஸ்வார்ம் ட்ரோன்கள் என புதிய ரக ஆயுதங்களில் இந்தியா கவனம் செலுத்தி வருவதாக விமானப்படை தளபதி கூறியுள்ளார்.

ஆறாம் தலைமுறை தொழில்நுட்பங்களுடன் உள்நாட்டு சண்டையிடும் அமைப்புகள் மேம்பாட்டில் இந்தியா கவனம் செலுத்தி வருகிறது.டிரேக்டட் எனர்ஜி வெபன் அதாவது லேசர் தொழில்நுட்பம் போன்றது தான்.எதிரி ஆயுதங்களின் மீது சக்தியை நேரடியாக உமிழ்ந்து வீழ்த்தக்கூடியது.அடுத்து தேவையெனும் போது மனிதர்கள் வைத்து இயக்க கூடிய தாக்கும் அமைப்புகள், ஸ்வார்ம் ட்ரோன்கள் மற்றும் ஹைபர்சோனிக் ஆயுதங்கள் ஆகிய மேம்பாட்டில் இந்தியா கவனம் செலுத்தி வருகிறது என தளபதி பதாரியா கூறியுள்ளார்.

ஸ்வார்ம் ட்ரோன்கள் எனப்படுபவை வானில் கூட்டமாக பறக்கும் சிறிய ஆளில்லா விமானங்கள் ஆகும்.இவை கூட்டமாக பறந்து எதிரி இலக்குகள் மீது தாக்குதலை தொடுக்கும்.

அடுத்து optionally manned platforms எனப்படுபவை அடுத்த தலைமுறை வாகனங்கள் ஆகும்.மிகத்துல்லிய தாக்குதல் ஆபரேசன்களுக்காக இந்த வாகனங்கள் பயன்படுத்தப்படும்.செயற்கை நுண்ணறிவு வழிகாட்டு தொழில்நுட்பத்துடன் இவை இயங்க கூடியவை.