
ஹால் நிறுவனத்தின் நாசிக் பிளான்டில் இருந்து பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததற்காக ஊழியர் ஒருவர் மஹாராஸ்டிரா பயங்கரவாத எதிர்ப்பு படையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவின் விமானத் தயாரிப்பு பணிகள் குறித்து பாகிஸ்தானுக்கு தகவல் வழங்கிய குற்றத்திற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாசிக் பிளான்டில் இருந்த இது போன்ற இரகசிய தகவல்கள் பாக்கிற்கு செல்வதாக மஹாராஸ்டிரா ஏடிஎஸ் படைக்கு உளவுத் தகவல் கிடைத்ததை அடுத்து இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விசாரணையின் போது அவர் பாக்கின் ஐஎஸ்ஐ உடன் தொடர்ந்து தொடர்பில் இருந்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.
தற்போது அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு பத்து நாள் காவலில் எடுக்கப்பட்டுள்ளார்.