
எல்லை மோதல் நடைபெற்று வரும் வேளையில் இந்தியா ரபேல் விமானங்களை படையில் இணைத்து வருகிறது.ஏற்கனவே ஐந்து விமானங்கள் படையில் இணைக்கப்பட்டுள்ள வேளையில் வரும் நவம்பர் மாதம் மேலும் நான்கு விமானங்கள் படையில் இணைக்கப்பட உள்ளது.
மேலும் படையில் புதிய விமானங்கள் இணைக்கப்பட்ட சில நாட்களிலேயே அவை நடவடிக்கைகளுக்கு நேரடியாக அனுப்பப்பட்டு வருகிறது.இந்த நான்கு விமானங்களும் படையில் இணையும் பட்சத்தில் இந்திய விமானப்படையில் ரபேல் விமானங்களின் எண்ணிக்கை 9ஆக உயரும்.
இந்த விமானங்கள் ஹரியானாவின் அம்பாலா விமானப்படை தளத்திற்கு வருகை தரும்.அங்கு ஒரு ஸ்குவாட்ரான் அளவு ரபேல் விமானங்களை எழுப்ப இந்திய விமானப்படை திட்டமிட்டுள்ளது.