2027ல் இந்தியாவின் முதல் ஐந்தாம் தலைமுறை விமானம்

  • Tamil Defense
  • October 6, 2020
  • Comments Off on 2027ல் இந்தியாவின் முதல் ஐந்தாம் தலைமுறை விமானம்

இந்தியா அடுத்த தலைமுறை விமானம் விரைவில் தயாரிக்க முயற்சித்து வருகிறது.தனியார் நிறுவனங்கள் ஒத்துழைப்புடன் இந்த திட்டம் முன்னகர்த்தப்பட உள்ளது.அடுத்த பத்து ஆண்டுகளில் கிட்டத்தட்ட 450 விமானங்கள் இந்திய விமானப்படைக்கு தேவையாக உள்ளது.

இந்திய விமானப்படை இந்த விமானத் தயாரிப்பிற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறது.2027ல் இந்த விமானம் முதல் பறப்பை மேற்கொள்ளும் அளவிற்கு மிக அழுத்தமாக மேம்பாடு பணிகள் நடைபெறுகிறது.

இந்த புதிய விமானத்தின் முதல் இரு ஸ்குவாட்ரான் விமானங்களில் வெளிநாட்டில் இருந்து பெறப்பட்ட என்ஜின் பொருத்தப்படும் எனவும் மற்ற ஐந்து ரெஜிமென்ட் விமானங்கள் உள்நாட்டு தயாரிப்பு என்ஜின் பெற்றிருக்கும் எனவும் விமானப்படை தளபதி பதாரியா கூறியுள்ளார்.

அடுத்த பத்து வருடங்களில் 140-150 ஏஎம்சிஏ ஐந்தாம் தலைமுறை விமானங்கள் படையில் இணைக்கப்படும் என தளபதி கூறியுள்ளார்.இது தவிர மேலதிக தேஜஸ் விமானங்களும் படையில் இணைக்கப்படும்.

இந்த ஐந்தாம் தலைமுறை விமானத்தில் ஆறாம் தலைமுறை விமானத்தின் தொழில்நுட்பங்களை இணைக்கவும் முயற்சி நடைபெற்று வருகிறது.