
கடற்சார் ரோந்து விமானமான டோர்னியர் விமானத்தில் பறக்க முதல் தொகுதி பெண் விமானிகள் தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
லெப்டினன்ட் திவ்யா ,லெப்டினன்ட் சுபாங்கி மற்றும் லெப் சிவாங்கி ஆகிய மூன்று விமானிகளும் பறக்க தயாராக உள்ளதாக பாதுகாப்ப செய்திதொடர்பாளர் கூறியுள்ளார்.
தெற்கு கடற்படை கமாண்டில் டோர்னியர் விமானங்களை அவர்கள் இயக்குவார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
மூன்று விமானிகளும் இதற்கு முன் விமானப்படையின் கீழ் அடிப்படை பறத்தல் பயிற்சிகளை மேற்கொண்டனர்.