ஸ்மார்ட் என்ற ஹைபிரிட் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை

  • Tamil Defense
  • October 5, 2020
  • Comments Off on ஸ்மார்ட் என்ற ஹைபிரிட் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை

சூப்பர்சோனிக் மிசைல் அசிஸ்டட் ரிலீஸ் ஆப் ட்ர்பிடோ அதாவது சுருக்கமாக ஸ்மார்ட் எனப்படும் ஏவுகணையை இன்று வெற்றிகரமாக டிஆர்டிஓ சோதனை செய்துள்ளது.

ஒடிசா கடற்கரையோர வீலர் தீவுப்பகுதியில் இருந்து இந்த ஏவுகணை அமைப்பு வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.சோதனையின் போது ஏவுகணையின் தூரம்,உயர அளவு போன்ற அனைத்து விசயங்களும் கண்காணிக்கப்பட்டன.

ஏவுகணை துணையுடன் இயங்கக்கூடிய இலகுரக நீர்மூழ்கி எதிர்ப்பு டோர்பிடோ அமைப்பு தான் இந்த ஸ்மார்ட் ஹைபிரிட் அமைப்பு.சாதாரண டோர்பிடோக்கள் செல்லும் தூரத்தை விட இந்த ரக டோர்பிடோக்கள் அதிக தூரம் செல்லும்.ஏவுகணை மற்றும் டோர்பிடோ என தொழில்நுட்பங்களையும் இணைத்து புதிய தொழில்நுட்பத்தில் ஆயுதம் தயாராகி உள்ளது.

வெற்றிகரமான இந்த சோதனைக்கு அறிவியலாளர்களுக்கு தனது வாழ்த்துக்களை இராணுவ அமைச்சர் பதிவு செய்துள்ளார்.