நிர்பயா ஏவுகணை மீண்டும் சோதனை !

இந்தியா சீனா பிரச்சனை தொடர்ந்து வருகிறது.எல்லையில் இரு நாடுகளும் தொடர்ந்து படைக்குவிப்பிலும் வருகின்ற குளிர்காலத்தை தாங்கும் வண்ணம் தேவையான உபகரணங்களை சேமித்தும் வருகின்றன.

இந்நிலையில் இந்தியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளில் ஈடுபட்டு வருகிறது.நிர்பயா, சௌரியா, ஸ்மார்ட் ஏவுகணை என தொடர்ந்து சோதனைகளில் ஈடுபட்டு வருகிறது டிஆர்டிஓ.

தற்போது டிஆர்டிஓ மீண்டும் 800கிமீ தூரம் செல்லும் நிர்பயா ஏவுகணையை சோதனை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த சோதனை இந்த மாத இறுதியில் அல்லது நவம்பரின் தொடக்கத்தில் நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.