தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிர்பயா சோதனை நிறுத்தம்

  • Tamil Defense
  • October 12, 2020
  • Comments Off on தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிர்பயா சோதனை நிறுத்தம்

திங்கள் அன்று சுமார் 800கிமீ செல்லக்கூடிய நிர்பயா க்ரூஸ் ஏவுகணையை ஒடிசா கடலோர பகுதியில் டிஆர்டிஓ சோதனை செய்தது.ஆனால் ஏவிய சில நிமிடத்திலேயே சோதனை நிறுத்தப்பட்டது.

ஏவிய பிறகு ஏவுகணையில் தொழில்நுட்ப கோளாறு உணரப்பட்டதால் சோதனை எட்டு நிமிடத்திற்கு பிறகு நிறுத்தப்பட்டது.

கடைசி 35 நாட்களில் டிஆர்டிஓ நடத்தும் பத்தாவது ஏவுகணை சோதனை இதுவாகும்.சீனா எல்லையில் பிரச்சனை செய்து வரும் வேளையில் இந்த தொடர்சோதனைகளை டிஆர்டிஓ செய்து வருகிறது.

மனம் தளராத டிஆர்டிஓ இன்னும் சில மாதங்களில் மீண்டும் சோதனை செய்யும் எனவும் அதன் பிறகு ஏவுகணை படையில் இணைக்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே சில தொகுதி நிர்பயா ஏவுகணைகள் எல்லைக்கு நகர்த்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது.

0.7 மாக் வேகத்தில் பறக்ககூடிய இந்த நிர்பயா சப்சோனிக் ஏவுகணை sea-skimming மற்றும் terrain-hugging capability திறன் கொண்டது.இதன் மூலம் இது எதிரி ரேடாரில் மிக குறைவாகவே அகப்படும்.