பாக்கில் உள்நாட்டு போர் தொடங்கியதா ? கலவரமான கராச்சி !

பாக் இராணுவம் அங்குள்ள சிந்து மாகாண காவல்துறை தலைவரை கடத்தியதாக எழுந்த புகாரை அடுத்து அங்கு நிலவரம் பதற்றத்துடன் காணப்படுகிறது.

சிந்து காவல் துறை தலைவர் கடத்தப்பட்டதாக எழுந்த புகாரை அடுத்த பாக் இராணுவ தளபதி நேரடியாகவே இந்த சம்பவத்தில் தலையிட்டு கடத்தப்பட்ட சம்பவம் குறித்த விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.பாக்கின் முன்னாள் பிரதமர் நவாஸ் செரிப்பின் மருமகனை கைது செய்ய கராச்சி காவல்துறைக்கு அழுத்தம் கொடுக்கும் விதம் இந்த செயலை பாக் இராணுவம் செய்ததாக கூறப்படுகிறது.

இதனை ஒட்டி நடைபெற்ற சண்டையில் பாக் காவல்துறை அதிகாரிகள் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சம்பவத்தை முன்னிட்டு அதிக அளவிலான காவல் துறை அதிகாரிகள் விடுப்பில் சென்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் குறித்த தகவல்களை பாக் இராணுவ தளபதி உடனடியாக விசாரித்து வழங்குமாறு கேட்டுள்ளார்.