இந்திய டேங்குகளின் தாக்குதலை சீன டேங்குகள் தாங்காது-இந்திய டேங்க் கமாண்டர்கள்

  • Tamil Defense
  • October 4, 2020
  • Comments Off on இந்திய டேங்குகளின் தாக்குதலை சீன டேங்குகள் தாங்காது-இந்திய டேங்க் கமாண்டர்கள்

சீனாவுடனான மோதல் ஐந்து மாதங்களாக தொடர்ந்து வரும் நிலையில் இந்திய டேங்குகளுக்கு எதிராக சீன டேங்குகள் எதிர்த்து நிற்க முடியாது என இந்திய டேங்க் கமாண்டர்கள் தெரிவித்துள்ளனர்.போர் என்று வந்தால் இந்திய டி-90 டேங்குகள் ஆதிக்கம் செலுத்தும் என கமாண்டர்கள் கூறியுள்ளனர்.

சீன கவச படைகளை எதிர்கொள்ள இந்திய பெரிய அளவில் கவச வாகனப்படைகளை குவித்துள்ளது.சண்டை எனில் அவர்கள் இலகுலக டேங்குகளை தான் அனுப்புவர்.இவற்றை நமது டி-90 மற்றும் டி-72 எளிதாக எதிர்கொள்ளும் என கமாண்டர் கூறியுள்ளார்.

சீனா தனது டி-15 டேங்குகளை தற்போது திபத் பகுதியில் நிலைநிறுத்தியுள்ளது.திபத் போன்ற மலைப்பாங்கான பகுதிகளில் செயல்பட இலகுரக டேங்குகள் தான் சிறந்தவை என சீன ஊடகம் தகவல்கள் வெளியிட்டு வருகின்றன.

டி-90 போன்ற ரஷ்யன் டேங்குகள் கடினமான குளிர்கால நிலையிலும் சிறப்பாக இயங்க கூடியது என டேங்க் கமாண்டர்கள் ஒருவர் கூறியுள்ளார்.