லடாக் பகுதியின் சுமார்-தெம்சோக் பகுதியில் சீன இராணுவ வீரர் ஒருவரை இந்திய வீரர்கள் பிடித்துள்ளனர்.தவறுதலாக அவர் இந்திய இராணுவ எல்லைக்குள் நுழைந்திருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது இந்திய இராணுவம் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறது.
உளவு பார்க்கும் நோக்கில் வந்தாரா அல்லது வழிதவறி வந்தாரா என்ற கோணங்களில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.