சுழற்சி முறையில் வீரர்களை அனுப்பும் சீனா ! பேச்சுவார்த்தை தேவை தானா?

  • Tamil Defense
  • October 12, 2020
  • Comments Off on சுழற்சி முறையில் வீரர்களை அனுப்பும் சீனா ! பேச்சுவார்த்தை தேவை தானா?

உடனடியாக படைகளை விலக்கவோ அல்லது மெதுவாக படைகளை விலக்கவோ எந்த அறிகுறியும் இல்லாமல் பங்கோங் ஏரியின் வடக்கு புறத்தில் சீனா சுழற்சி முறையில் வீரர்களை அனுப்பி வருகிறது.

7வது கட்ட பேச்சுவார்த்தை தற்போது சூசுல் செக்டாரில் நடைபெற்று வருகிறது.சீனா படை விலக்கம் கொள்ளாத வரையில் இந்தியாவும் படைகளை திரும்ப பெறாது.

தற்போது தான் சீனா மேலதிக பிரிகேடு ஒன்றை வடக்கு பங்கோங் பகுதிக்கு அனுப்பியுள்ளது.இவர்கள் பிங்கர் பகுதிகளில் பணியில் இருக்கும் வீரர்களுக்கு மாற்றாக நிலைநிறுத்தப்படுவர்.வீரர்கள் சோர்வடையாமல் இருக்க இதுபோல சுழற்சி முறை யுக்தியை கையாள்கிறது சீனா.

இதன் மூலம் சீனா படைவிலக்கம் கொள்ளும் நோக்கிலேயே இல்லை என்பதை புரிந்து கொள்ளலாம்.