எல்லையில் 44 முக்கிய பாலங்கள்-சீனா எதிர்ப்பு

  • Tamil Defense
  • October 13, 2020
  • Comments Off on எல்லையில் 44 முக்கிய பாலங்கள்-சீனா எதிர்ப்பு

வியூக முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் 44 முக்கிய பாலங்கள் இந்தியா கட்டியுள்ளதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.மேலும் இந்தியா லடாக்கை யூனியன் பிரதேசமாக அறிவித்ததை அங்கீகரிக்க முடியாது எனவும் சீனா கூறியுள்ளது.

எல்லை பிரச்சனை தொடர்பான ஏழாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு சீனா இவ்வாறு கூறியுள்ளது.இந்திய சீன எல்லை மோதல் இன்னும் தொடர்ந்து வருகிறது.

பிரச்சனைக்குரிய பகுதியில் இந்தியா இராணுவ கட்டுமானங்கள் ஏற்படுத்தி வருவதை எதிர்க்கிறோம் என சீனா கூறியுள்ளது.பிரச்சனையை பெரிதாக்கும் வண்ணம் இந்தியா எந்த விசயமும் செய்யக்கூடாது என சீனா கூறியுள்ளது.

ஏழு மாநிலங்கள்/யூனியன் பிரசதேசங்களின் எல்லைப்பகுதியில் இந்தியா முக்கிய பாலங்களை திறந்துள்ளது.இவைகள் இந்திய இராணுவம் எல்லைப் பகுதிகளுக்கு செல்ல உதவும்.

தற்போது வரை இந்தியா சீனா இடையே நடைபெற்று வரும் பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் இல்லை.