காரகோரம் பகுதியில் இருந்து வெறும் 475கிமீ தொலைவில் சீனாவின் ஜின்ஜியாங் பகுதியில் உள்ள கஷ்கார் விமானத் தளத்தில் போர்விமானங்கள் சகிதம் பரப்பரப்பான சூழ்நிலை நிலவுகிறது.சீனாவின் குண்டுவீசு விமானமான H-6 இந்த தளத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்திய சீனா பிரச்சனை தொடங்கியது முதல் இந்த கஷ்கர் தளம் முக்கியமாக பேசப்பட்டு வருகிறது.முதல் இரு H-6 குண்டுவீசு விமானங்கள் கடந்த ஜீன் மாதம் முதலே இங்கு நிலைநிறுத்தப்பட்டிருந்தது.
தற்போது வெளியான செயற்கைகோள் படங்கள் வழியாக இந்த இரு H-6 விமானங்களும் KD-63 ஏவுகணைகளுடன் தயாராக நிறுத்தப்பட்டுள்ளது தெரிகிறது.இந்த ஏவுகணைகள் வானில் இருந்து ஏவப்பட்டு தரை இலக்குகளை தாக்க கூடியவை ஆகும்.
தற்போது மேலும் ஆறு H-6 குண்டுவீசு விமானங்கள் கஷ்கர் தளத்தில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இதற்கு முன் தற்காலிகமாக இந்த விமானங்கள் கஷ்கர் தளத்தில் நிறுத்தப்பட்டிருந்தன.ஆனால் தற்போது நீண்ட கால ஆபரேசன்களுக்காக நிறுத்தப்பட்டிருப்பதாக தெரிகிறது.
இதுதவிர மத்திய சீனாவின் கோல்முட் தளத்திலும் குண்டுவீசு விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.மேலும்
Y-20 போக்குவரத்து விமானங்களின் நடவடிக்கையும் காணப்பட்டுள்ளது.