ஆயுதம் ஏந்திய ஆளில்லா விமானங்கள் வாங்க ஏன் தயக்கம் ?

  • Tamil Defense
  • October 8, 2020
  • Comments Off on ஆயுதம் ஏந்திய ஆளில்லா விமானங்கள் வாங்க ஏன் தயக்கம் ?

அமெரிக்காவிடம் இருந்து இந்திய விமானப்படைக்கு 30 ஆளில்லா தாக்கும் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தம் குறித்து இன்னும் முடிவு எடுக்காமல் உள்ளது பாதுகாப்பு அமைச்சகம்.அவற்றின் தேவை குறித்து விமானப்படை தெரிவித்தும் இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை.3 பில்லியன்கள் டாலர் அளவில் ஆளில்லா விமானங்கள் பெற ஏற்கனவே முடிவு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

சீனா மற்றும் பாக் உடனான எல்லைத் தகராறு தற்போது நடந்து வருகிறது.தற்போது இந்த தாக்கும் விமானங்கள் பெறுவது விமானப்படைக்கு வலுசேர்க்கும்.

ஜெனரல் அடோமிக்ஸ் நிறுவனத்திடம் இருந்து இதற்கு முன் 30 விமானங்கள் வாங்க திட்டமிடப்பட்டிருந்தது.முப்படைகளுக்கும் பத்து விமானங்கள் என MQ-9 Reaper விமானங்கள் வழங்க முடிவு செய்யப்பட்டிருந்தது.

மேலும் இந்த ரக விமானங்களை இந்தியாவிற்கு வழங்க அமெரிக்காவும் அனுமதி வழங்கியிருந்தது.இந்திய கடற்பகுதியில் தனது கண்காணிப்பை பலப்படுத்த இந்திய கடற்படைக்கு இந்த விமானங்கள் பேருதவியாக இருக்கும்.

தற்போது நடக்கும் அஜர்பைசான் மற்றும் அர்மீனிய நாடுகளுக்கு இடையேயான போரில் கூட ஆளில்லா தாக்கும் விமானங்களின் திறன் நிரூபிக்கப்பட்டுள்ளது.