அஜர்பைசான்-ஆர்மீனியா போர்நிறுத்தம் ?

அக்டோபர் 10 மதியம் முதல் அஜர்பைசான் ஆர்மீனியா போர்நிறுத்தம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நகார்னோ-காரபாக் பகுதியில் அர்மீனியா மற்றும் அஜர்பைசான் நாடுகள் போர் செய்து வருகின்றன.தற்போது அக்டோபர் 10 மதியம் இரு நாடுகளும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக இரஷ்ய வெளியுறவு அமைச்சர்
செர்ஜி லாவ்ரோவ் கூறியுள்ளார்.

இரு நாட்டு முக்கிய அதிகாரிகளும் தொடர் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு இந்த போர்நிறுத்தம் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மனிதாபிமான அடிப்படையில் இரு நாடுகளும் அக்டோபர் 10 மதியம் 12 மணி முதல் போர்நிறுத்த ஒப்பந்தம் அமலாக்க ஒப்புக்கொண்டுள்ளன.

போரில் இறந்தவர்கள் மற்றும் போர்க்கைதிகளை இருநாடுகளும் தற்போது பரிமாறிக்கொள்ளும்.