அருணாச்சல் இந்தியாவிற்கே சொந்தம்-அமெரிக்கா அதிரடி

  • Tamil Defense
  • October 2, 2020
  • Comments Off on அருணாச்சல் இந்தியாவிற்கே சொந்தம்-அமெரிக்கா அதிரடி

இந்தியா சீனா எல்லைப் பிரச்சனை தற்போது நடந்து வருகிறது.கிழக்கு லடாக் பகுதி இன்னும் பதற்றம் நிறைந்ததாகவே காணப்படுகிறது.மேலும் சீனா அருணாச்சலையும் தன்னுடைய பகுதி என்று கூறி வருகிறது.இந்நிலையில் அருணாச்சல் இந்தியாவிற்கே சொந்தம் என அமெரிக்கா கூறியுள்ளது.

கடந்த ஆறு தலைமுறைகளாக அருணாச்சல் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகவே உள்ளது.அருணாச்சல் இந்தியாவின் பகுதியாகவே அமெரிக்கா அங்கீகரித்துள்ளது என மூத்த அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

சீனா ஒருதலைப்பட்சமாக எல்லைக் கோட்டை மாற்ற முயற்சி செய்தால் அமெரிக்கா அதை வரவேற்காது என அவர் கூறியுள்ளார்.

தற்போது எல்லையில் நடக்கும் சம்பவங்களை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருவதாக அவர் கூறியுள்ளார்.