இலக்கை துல்லியமாக தாக்கிய ஐஎன்எஸ் கோரா

  • Tamil Defense
  • October 30, 2020
  • Comments Off on இலக்கை துல்லியமாக தாக்கிய ஐஎன்எஸ் கோரா

இந்திய கடற்படை கப்பல் எதிர்ப்பு ஏவுகணையை மீண்டும் ஒரு முறை வெற்றிகரமாக போர்க்கப்பலில் இருந்து ஏவி சோதனை செய்துள்ளது.

இந்திய கடற்படையின் ஐஎன்என் கோரா கப்பலில் இருந்து ஏவப்பட்ட Kh-35 கப்பல் எதிர்ப்பு ஏவுகணை அதிகபட்ச தூரம் பறந்து படையில் இருந்து விடுவிக்கப்பட்ட மற்றொரு போர்க்கப்பலான ஐஎன்எஸ் கன்னனூர் போர்க்கப்பலை துல்லியமாக தாக்கியது.

இதற்கு முன் ஐஎன்எஸ் பிரபால் போர்க்கப்பலில் இருந்து கப்பல் எதிர்ப்பு ஏவுகணை ஏவப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.