அந்தமானில் அமெரிக்க பி-8ஏ ரோந்து விமானம்

  • Tamil Defense
  • October 3, 2020
  • Comments Off on அந்தமானில் அமெரிக்க பி-8ஏ ரோந்து விமானம்

இந்தியா மற்றும் சீனா இடையிலான எல்லைப் பிரச்சனை தொடர்ந்து வரும் நிலையில் அமெரிக்க கடற்படையின் நெடுந்தூர ரோந்து விமானமான பி-8ஏ அந்தமானில் தரையிறங்கி எரிபொருள் நிரப்பிக்கொண்டுள்ளது.

2016ல் இருநாடுகளும் LEMOA என்ற லாஜிஸ்டிக் பரிமாற்ற ஒப்பந்தம் மேற்கொண்டன.அதன் படி இருநாட்டு இராணுவங்கள் மற்ற நாடுகளின் தளங்களை பயன்படுத்தி கொள்ளலாம்.2017 முதல் நடைமுறைக்கு வந்த இந்த ஒப்பந்தத்திற்கு பிறகு ஜப்பான் கடற்பகுதியில் இந்திய கடற்படை போர்க்கப்பலுக்கு அமெரிக்க டேங்கர் கப்பல் எரிபொருள் நிரம்பியது குறிப்பிடத்தக்கது.

அதே ஒப்பந்தத்திற்கு கீழ் தான் தான் தற்போது அமெரிக்க விமானம் எரிபொருள் நிரப்பிக்கொண்டது.