
இந்தியாவுடனான உறவை ஆழப்படுத்தும் விதத்தில் அமெரிக்கா மீண்டும் தனது F-18 விமானங்களை இந்திய கடற்படைக்கு வழங்க தயாராக இருப்பதாக கூறியுள்ளது.
இந்தியா தனது விக்ரமாதித்யா விமானம் தாங்கி கப்பல் மற்றும் விக்ராந்த் விமானம் தாங்கி கப்பலில் இருந்து இயக்க 57 கடற்சார் தாக்கும் விமானங்கள் தேவை என்ற அறிவிப்பை சில ஆண்டுகளுக்கு முன் அறிவித்தது.இதற்கு தனது எப்/ஏ-18 விமானங்களை வழங்க அமெரிக்கா தயாராக இருப்பதாக அறிவித்தது.
இந்தியா மற்றும் அமெரிக்காவிற்கு இடையே தற்போது நடைபெற்று வரும் 2+2 சந்திப்பின் போது மீண்டும் F-18 விமானங்களை இந்தியாவிற்கு வழங்க தயாராக இருப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது.
இத்துடன் ஆளில்லா Sea Guardian விமானங்களை இந்திய கடற்படைக்கு வழங்க தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளது.