பெக்கோரா வான் பாதுகாப்பு அமைப்பை அப்கிரேடு செய்ய உள்ள தனியார் நிறவனம்
1 min read

பெக்கோரா வான் பாதுகாப்பு அமைப்பை அப்கிரேடு செய்ய உள்ள தனியார் நிறவனம்

இந்திய விமானப்படையில் தற்போது செயல்பாட்டில் உள்ள சோவியத் கால வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பான பெக்கோரா வான் பாதுகாப்பு அமைப்பை நவீனப்படுத்தும் ஆர்டரை இந்தியாவை சேர்ந்த தனியார் நிறுவனமான ஆல்பா டிசைன் டெக்னாலஜி நிறுவனம் பெற்றுள்ளது.

தற்போது செயல்பாட்டில் உள்ள 16 அமைப்புகளை நவீனப்படுத்தும் இந்த ஒப்பந்தத்தை பெற்றுள்ளது.சுமார் 591 கோடிகள் செலவில் இந்த நவீனப்படுத்தும் பணி நடைபெறும்.

கடந்த 30 வருடங்களாக இந்த பாதுகாப்பு அமைப்பு செயல்பாட்டில் உள்ளது.இந்த அமைப்புகளை நவீனப்படுத்த ஆல்பா டிசைன் நிறுவனம் இரஷ்ய நிறுவனத்துடன் இணைந்து செயல்படும்.