தயாராகும் ஹால் நிறுவனம்; டிசம்பரில் தேஜஸ் ஆர்டர்

  • Tamil Defense
  • October 9, 2020
  • Comments Off on தயாராகும் ஹால் நிறுவனம்; டிசம்பரில் தேஜஸ் ஆர்டர்

வரும் டிசம்பர் மாதத்தில் 83 தேஜஸ் மார்க் 1ஏ விமானங்கள் வாங்கும் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என விமானப்படை தளபதி ராகேஷ் குமார் சிங் கூறியுள்ளார்.டிசம்பர் 2020ல் ஹால் மற்றும் இந்திய விமானப்படை இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் என தகவல் வெளியிட்டுள்ளார்.

2023 முதல் டெலிவரி தொடங்கப்பட்டு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் முடிக்கப்படும்.இதற்காக 2024-25 முதல் வருடத்திற்கு 20 விமானங்களை தயாரிக்க விமானப்படை ஹால் நிறுவனத்திடம் கேட்டுள்ளது.

இதற்காக ஹால் நிறுவனம் GE Aviation நிறுவனத்திடம் இருந்து  100+ F404-GE-IN20 என்ஜின்களை பெற பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.அதே நேரம் இஸ்ரேல் நிறுவனத்திடம் இருந்து ELM-2052 AESA Radar ஆர்டர் செய்துள்ளது.