Day: October 30, 2020

பெரிய சாதனை: சுகாயில் இருந்து பிரம்மோஸ் ஏவுகணை சோதனை

October 30, 2020

இந்திய விமானப்படை இன்று சுகாய் விமானத்தில் இருந்து பிரம்மோஸ் ஏவுகணை வங்காள விரிகுடா பகுதியில் வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. பஞ்சாபில் உள்ள ஒரு விமானப்படை தளத்தில் இருந்து கிளம்பிய சுகாய் விமானம் நடுவழியில் எரிபொருள் நிரப்பி வங்காள விரிகுடாவை அடைந்துள்ளது.இது இரண்டாவது வெற்றிகரமான முயற்சி ஆகும். ஏவப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை நடுக்கடலில் இருந்த இலக்கை வெற்றிகரமாக தாக்கியழித்துள்ளது. மொத்தம் 4000கிமீ பயணித்து இலக்கை அடைந்துள்ளது பிரம்மோஸ் ஏவுகணை.

Read More

இலக்கை துல்லியமாக தாக்கிய ஐஎன்எஸ் கோரா

October 30, 2020

இந்திய கடற்படை கப்பல் எதிர்ப்பு ஏவுகணையை மீண்டும் ஒரு முறை வெற்றிகரமாக போர்க்கப்பலில் இருந்து ஏவி சோதனை செய்துள்ளது. இந்திய கடற்படையின் ஐஎன்என் கோரா கப்பலில் இருந்து ஏவப்பட்ட Kh-35 கப்பல் எதிர்ப்பு ஏவுகணை அதிகபட்ச தூரம் பறந்து படையில் இருந்து விடுவிக்கப்பட்ட மற்றொரு போர்க்கப்பலான ஐஎன்எஸ் கன்னனூர் போர்க்கப்பலை துல்லியமாக தாக்கியது. இதற்கு முன் ஐஎன்எஸ் பிரபால் போர்க்கப்பலில் இருந்து கப்பல் எதிர்ப்பு ஏவுகணை ஏவப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Read More

சௌதியை எச்சரித்த இந்தியா -என்ன நடந்தது ?

October 30, 2020

சமீபத்தில் சௌதி வெளியிட்ட பணநோட்டில் இந்தியாவின் காஷ்மீரில் சில பகுதிகள் விடுபட்டிருந்தது.இதற்கு கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ள இந்தியா சௌதி பிழையை உணர்ந்து திருத்துமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது. காஷ்மீரை பாக்குடனோ அல்லது இந்தியாவுடனோ இணைக்காமல் தனித்த பகுதியாக அந்த பணத்தில் அச்சிடப்பட்டுள்ளது.தற்போது பாக் கட்டுப்பாட்டில் இருக்கும் பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் கில்ஜித் பல்டிஸ்தான் பகுதிகளையும் தனியான பகுதியாக காட்டியுள்ளது. ஜம்மு,காஷ்மீர் மற்றும் லடாக் பிராந்தியங்கள் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகள் என இந்தியா உறுதிபடக்கூறியுள்ளது.

Read More

பாக்கின் முன்னனி பிரிகேடுகளை தகர்க்க தயாராக இருந்தோம்-முன்னாள் விமானப்படை தளபதி

October 30, 2020

பாலக்கோட் தாக்குதலுக்கு பிறகு பாக்கின் முன்னனி பிரிகேடுகளை தாக்க தயாராக இருந்தோம் என முன்னாள் விமானப்படை தளபதி தனோவா அவர்கள் கூறியுள்ளார். அபிநந்தன் அவர்களை விடுவிக்காவிட்டால் இந்தியா இன்று இரவு 9 மணிக்கு தாக்கும் என பாக்கின் வெளியுறவு அமைச்சர் கூறியதாக பாக் முஸ்லீம் லீக் தலைவர் அயுஸ் சாதிக் கூறிய பிறகு இந்த தகவலை முன்னாள் விமானப்படை தளபதி கூறியுள்ளார். அபிநந்தன் அவர்களினன தந்தை மற்றும் நான் ஒன்றாக பணியாற்றியவர்கள்.அபிநந்தன் பாக் பக்கத்தில் விழுந்த போது […]

Read More