இந்தியாவிற்குள் ஊடுருவ காத்திருக்கும் 250 பயங்கரவாதிகள்- இந்திய இராணுவம்

  • Tamil Defense
  • October 14, 2020
  • Comments Off on இந்தியாவிற்குள் ஊடுருவ காத்திருக்கும் 250 பயங்கரவாதிகள்- இந்திய இராணுவம்

இந்திய எல்லைப் பகுதிக்குள் ஊடுருவ சுமார் 250க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் தயாராக உள்ளதாக இந்திய இராணுவம் கூறியுள்ளது.

இந்திய இராணுவத்தின் வஜ்ரா டிவிசனின் கமாண்டிங் அதிகாரி மேஜர் ஜெனரல் அமர்தீப் சிங் அவர்கள் கூறுகையில் “215 முதல் 250 பயங்கரவாதிகள் எல்லைக் கட்டுப்பாடு கோடு வழியாக இந்திய எல்லைக்குள் நுழைய பயங்கரவாதிகள் தயாராக உள்ளனர்” என கூறியுள்ளார்.

அவர்களின் ஊடுருவல் முயற்சியை முறியடிக்க எங்களுக்கு கிடைத்த உளவுத் தகவல்கள் அடிப்படையில் வீரர்களின் எண்ணிக்கையை எல்லைக் கோடு பகுதியில் அதிகரித்து ரோந்தை பலப்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.