Day: October 24, 2020

பாக் உளவாளி இராஜஸ்தானில் கைது

October 24, 2020

பாக்கிற்கு உளவு பார்த்த காரணத்திற்காக இரஜஸ்தானின் பார்மரில் இருந்து ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான்.அவன் மேலதிக விசாரணைக்காக ஜெய்ப்பூர் அழைத்து செல்லப்பட்டுள்ளான். இவ்வாறு உளவு புகாரில் கைது செய்யப்படுவது இது இரண்டாவது முறை ஆகும்.இதற்கு முன் மகாராஸ்டிராவின் ஹால் நாசிக் பிளான்டில் இருந்து மற்றொருவன் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவன் இந்திய விமானத் தயாரிப்பு குறித்து பாகிஸ்தானின் உளவுத்துறைக்கு தகவல்களை அனுப்பியுள்ளான்.

Read More

கமோர்ட்டா வகை நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க்கப்பல்கள்

October 24, 2020

இந்தியக் கடற்படையின் மிக ஆபத்தான நீர்மூழ்கி எதிர்ப்பு கப்பல் பற்றி இந்த பதிவில் காணலாம். முன்னுரை நீர்மூழ்கி எதிர்ப்பு கப்பல்கள் ஒரு நவீன கடற்படையில் இன்றியமையாத ஒன்றாகும்.வெளியில் அதிகம் கவனிக்கப்படாத ஒரு கப்பல் வகையாகவும் இது உள்ளது.பல கடற்படைகளில் இது போன்றதொரு வகை கப்பல்கள் இல்லாமல் உள்ளது.இதற்காக அந்த கடற்படைகள் வேறு பெரிய வகை கப்பல்களை நம்பி உள்ளனர்.ஆனால் வளர்ந்து வரும் நீர்மூழ்கி அச்சுறுத்தல்களுக்கு இது போன்ற கப்பல் வகை எல்லா நாட்டு கடற்படைக்கும் தேவையாக உள்ளது.உலகம் […]

Read More

சீனத் தயாரிப்பு ட்ரோனை சுட்டு வீழ்த்திய இந்திய இராணுவம்

October 24, 2020

கேரன் செக்டாரில் பாக் இராணுவத்தின் சீனத் தயாரிப்பு குவாட்காப்டரை இந்திய இராணுவ வீரர்கள் சுட்டு வீழ்த்தியுள்ளனர். எல்லைக்கட்டுப்பாடு கோடு பகுதியின் கேரன் செக்டரில் காலை 8 மணி அளவில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்திய நிலைக்கு அருகே இந்த குவாட்காப்டர் பறந்துள்ளது.அதை கண்ட வீரர்கள் அந்த ட்ரோனை சுட்டு வீழ்த்தினர்.அந்த ட்ரோன் சீனாவின் DJI Mavic 2 Pro model என பின்பு கண்டறியப்பட்டுள்ளது.

Read More