இந்திய இராணுவத்திற்காக டிஆர்டிஓ மேம்படுத்தியுள்ள டேங்க் எதிர்ப்பு ஏவுகணையான நாக் இன்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.இந்த ஏவுகணை தற்போது படையில் இணைக்கப்பட உள்ளது. பொக்ரான் சோதனை தளத்தில் காலை 6.45க்கு இந்த ஏவுகணை ஏவி பரிசோதனை செய்யப்பட்டது.உண்மையான வெடிபொருளை ஏவுகணை முனையில் இணைத்து ஒரு டேங்கை இலக்காக வைத்து பரிசோதனை செய்யப்பட்டதில் இலக்கை ஏவுகணை மிகச் சரியாக தாக்கியது. இந்த ஏவுகணை இரவு மற்றும் பகலில் செயல்பட வல்லது.எதிரி கவச வாகனங்கள் மற்றும் பங்கர்களை இதன் மூலம் […]
Read Moreகடற்சார் ரோந்து விமானமான டோர்னியர் விமானத்தில் பறக்க முதல் தொகுதி பெண் விமானிகள் தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. லெப்டினன்ட் திவ்யா ,லெப்டினன்ட் சுபாங்கி மற்றும் லெப் சிவாங்கி ஆகிய மூன்று விமானிகளும் பறக்க தயாராக உள்ளதாக பாதுகாப்ப செய்திதொடர்பாளர் கூறியுள்ளார். தெற்கு கடற்படை கமாண்டில் டோர்னியர் விமானங்களை அவர்கள் இயக்குவார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது. மூன்று விமானிகளும் இதற்கு முன் விமானப்படையின் கீழ் அடிப்படை பறத்தல் பயிற்சிகளை மேற்கொண்டனர்.
Read Moreசீனாவுக்கு எதிராக தனது பலத்தை அதிகரித்து வரும் தைவானிற்கு உதவும் விதமாக சுமார் 1 பில்லியன் டாலர் அளவிலான அதிநவீன வான்-தரை இலக்குகளை தாக்கும் ஏவுகணைகளை அமெரிக்கா வழங்க உள்ளது. வானில் இருந்து தரை இலக்குகளை நோக்கி ஏவப்படக்கூடிய AGM-84H SLAM-ER க்ரூஸ் ஏவுகணைகளை அமெரிக்கா வழங்க உள்ளது.இது தவிர ஆறு MS-110 air reconnaissance pods மற்றும் 11 M142 மொபைல் இலகுரக ராக்கெட் லாஞ்சர்கள் ஆகியவையும் வழங்க உள்ளது அமெரிக்கா. நிலையாக உள்ள அல்லது […]
Read MoreSANT எனப்படும் டேங்க் எதிர்ப்பு ஏவுகணை ஒன்றை வெற்றிகரமாக இந்தியா சோதனை செய்துள்ளது.அக்டோபர் 20 அன்று இந்த ஏவுகணை வெற்றிகரமாக ஒடிசா கடலோர பகுதியில் சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்திய விமானப்படைக்காக இந்த ஏவுகணையை டிஆர்டிஓ மேம்படுத்தியுள்ளது.ஏவிய பிறகு இலக்கை லாக் செய்வது மற்றும் ஏவுவதற்கு முன் இலக்கை லாக் செய்வது எனும் திறமையை இந்த ஏவுகணை பெற்றுள்ளது. இதற்கு முன் இந்திய கடற்படை ஐஎன்எஸ் சென்னை போர்க்கப்பலில் இருந்து பிரம்மோஸ் ஏவுகணையை வெற்றிகரமாக ஏவி பரிசோதனை செய்தது.ஏவுகணை […]
Read Moreகிழக்கு லடாக் பகுதியில் கடந்த திங்கள் அன்று தெம்சோக் செக்டார் பகுதியில் இந்திய எல்லைக்குள் நுழைந்த சீன இராணுவ வீரர் ஒருவரை இந்திய இராணுவ வீரர்கள் கைது செய்தனர். கார்போரல் வாங் யு லோங் என்று அடையாளம் காணப்பட்ட அவர் உளவு பார்க்க வந்தாரா என்ற கோணத்தில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு தற்போது அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். அனைத்து செயல்முறைகளும் முடிந்த பிறகு இந்திய சீன இராணுவ பேச்சுவார்த்தை சந்திப்பு எல்லையான சூசுல்-மோல்டோ எல்லையில் சீன இராணுவத்திடம் அவர் […]
Read Moreபாக் இராணுவம் அங்குள்ள சிந்து மாகாண காவல்துறை தலைவரை கடத்தியதாக எழுந்த புகாரை அடுத்து அங்கு நிலவரம் பதற்றத்துடன் காணப்படுகிறது. சிந்து காவல் துறை தலைவர் கடத்தப்பட்டதாக எழுந்த புகாரை அடுத்த பாக் இராணுவ தளபதி நேரடியாகவே இந்த சம்பவத்தில் தலையிட்டு கடத்தப்பட்ட சம்பவம் குறித்த விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.பாக்கின் முன்னாள் பிரதமர் நவாஸ் செரிப்பின் மருமகனை கைது செய்ய கராச்சி காவல்துறைக்கு அழுத்தம் கொடுக்கும் விதம் இந்த செயலை பாக் இராணுவம் செய்ததாக கூறப்படுகிறது. […]
Read More