டிசம்பரில் மிக்-29 விமானங்கள் வாங்க ஒப்பந்தம்

  • Tamil Defense
  • October 6, 2020
  • Comments Off on டிசம்பரில் மிக்-29 விமானங்கள் வாங்க ஒப்பந்தம்

இரஷ்யாவிடம் இருந்து 21 மிக்-29 விமானங்கள் வாங்கும் ஒப்பந்தம் வரும் டிசம்பரில் மேற்கொள்ளப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.முன்பு கட்டப்பட்ட பழைய ஏர்பிரேம்கள் இரஷ்யாவிடம் உள்ளது.அவை பெற்றப்பட்டு நவீனப்படுத்தப்பட உள்ளது.விமானப்படையின் சரிந்து வரும் ஸ்குவாட்ரான்களின் எண்ணிக்கையை மேம்படுத்த பல்வேறு நடவடக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த 21 மிக்-29 விமானங்களை தொடர்ந்து 12 சுகாய் எம்கேஐ விமானங்கள் நமது ஹால் நிறுவனத்திடம் இருந்து பெறப்பட உள்ளது.

இது தவிர 83 தேஜஸ் மார்க் 1ஏ விமானங்களும் ஆர்டர் செய்யப்பட உள்ளன.”இரஷ்யாவுடனான பேச்சு வார்த்தை முடிந்தது.மிக்-29 விமானங்கள் நல்ல விலையில் பெறப்படுகின்றன.இதற்கு பிறகு ஹால் நிறுவனத்திடம் இருந்து 12 மேலதிக சுகாய் விமானங்கள் பெறப்படும்” என அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.