180 பயங்கரவாதிகளை வீழ்த்திய வீரர்கள்

இந்த வருடத்தில் இதுவரை 75 வெற்றிகரமான ஆபரேசன்கள் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடத்தப்பட்டுள்ளது என காஷ்மீர் காவல் துறையின் டிரேக்கர் ஜெனரல் தில்பக் சிங் கூறியுள்ளார்.இந்த ஆபரேசன்களில் 180 பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளதாகவும், நமது பக்கம் 55 வீரர்கள் வீரமரணம் அடைந்ததாகவும் அவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

இது தவிர 138 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இது சென்ற வருடத்தை விட அதிகம் ஆகும்.

நேற்று ஸ்ரீநகரின் ராம்பக் பகுதியில் நடைபெற்ற என்கௌன்டரில் முக்கிய லஷ்கர் கமாண்டர் உட்பட இரு பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டனர்.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பத்து பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளனர்.

இது தவிர பயங்கரவாத இயக்கத்தில் இணைந்த 26 பயங்கரவாதிகளை திருத்தி வீட்டிற்கு அனுப்பியுள்ளனர் பாதுகாப்பு படை வீரர்கள்.