Day: October 13, 2020

எல்லையில் 44 முக்கிய பாலங்கள்-சீனா எதிர்ப்பு

October 13, 2020

வியூக முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் 44 முக்கிய பாலங்கள் இந்தியா கட்டியுள்ளதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.மேலும் இந்தியா லடாக்கை யூனியன் பிரதேசமாக அறிவித்ததை அங்கீகரிக்க முடியாது எனவும் சீனா கூறியுள்ளது. எல்லை பிரச்சனை தொடர்பான ஏழாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு சீனா இவ்வாறு கூறியுள்ளது.இந்திய சீன எல்லை மோதல் இன்னும் தொடர்ந்து வருகிறது. பிரச்சனைக்குரிய பகுதியில் இந்தியா இராணுவ கட்டுமானங்கள் ஏற்படுத்தி வருவதை எதிர்க்கிறோம் என சீனா கூறியுள்ளது.பிரச்சனையை பெரிதாக்கும் வண்ணம் இந்தியா எந்த விசயமும் […]

Read More

ஐந்தே நாட்களில் இரண்டாவது முறை-காஷ்மீருக்குள் ஆயுதங்களை கடத்தும் பாகிஸ்தான்

October 13, 2020

பாக் தொடர்ந்து காஷ்மீருக்குள் ஆயுதங்களை கடத்த முயற்சி செய்து வருகிறது.இதன் மூலம் காஷ்மீரில் அமைதியின்மையை உருவாக்குவதே பாக்கின் குறிக்கோள்.அதன் படி கடந்த ஐந்தே நாட்களில் பாக் இரு முறை காஷ்மீருக்குள் ஆயுதங்களை கடத்த முயற்சி செய்துள்ளது.இதை இந்திய இராணுவம் வெற்றிகரமாக முறியடித்துள்ளது. வடக்கு காஷ்மீரின் தங்தார் செக்டாரில் ஆயுதங்கள் குறித்த தகவல் கிடைத்த போது இராணுவ வீரர்கள் திங்கள் மாலை 6.30 மணிக்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த தேடுதல் வேட்டையின் போது வீரர்கள் ஐந்து கைத்துப்பாக்கிகள்,பத்து […]

Read More

மியான்மருக்கு குண்டுகள்,சோனார் மற்றும் குண்டுதுளைக்கா உடைகள் வழங்க இந்தியா ஒப்புதல்

October 13, 2020

சில நாட்களுக்கு முன் தான் இந்திய இராணுவ தளபதி முகுந்த் நரவனே மற்றும் வெளியுறவு செயலர் ஹர்ஸ் வர்தன் ஆகியோர் மியான்மர் நாட்டிற்கு பயணம் செய்தனர்.இந்த சந்திப்பின் போது மியான்மர் நாட்டிற்கு இராணுவ தளவாடங்கள் வழங்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது. ஆர்டில்லரி துப்பாக்கிகள், டி-72 டேங்குகளுக்கான குண்டுகள்,ரேடார்கள்,சோனார்கள் மற்றும் 500 குண்டுதுளைக்காத உடைகள் ஆகியவை வழங்க இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது. மியான்மரில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வருகிறது.சீனாவும் இந்தியாவை சுற்றியுள்ள நாடுகளுக்கு ஆயுதங்கள் […]

Read More

180 பயங்கரவாதிகளை வீழ்த்திய வீரர்கள்

October 13, 2020

இந்த வருடத்தில் இதுவரை 75 வெற்றிகரமான ஆபரேசன்கள் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடத்தப்பட்டுள்ளது என காஷ்மீர் காவல் துறையின் டிரேக்கர் ஜெனரல் தில்பக் சிங் கூறியுள்ளார்.இந்த ஆபரேசன்களில் 180 பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளதாகவும், நமது பக்கம் 55 வீரர்கள் வீரமரணம் அடைந்ததாகவும் அவர் தகவல் வெளியிட்டுள்ளார். இது தவிர 138 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இது சென்ற வருடத்தை விட அதிகம் ஆகும். நேற்று ஸ்ரீநகரின் ராம்பக் பகுதியில் நடைபெற்ற என்கௌன்டரில் முக்கிய லஷ்கர் கமாண்டர் உட்பட இரு பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டனர். […]

Read More