உடனடியாக படைகளை விலக்கவோ அல்லது மெதுவாக படைகளை விலக்கவோ எந்த அறிகுறியும் இல்லாமல் பங்கோங் ஏரியின் வடக்கு புறத்தில் சீனா சுழற்சி முறையில் வீரர்களை அனுப்பி வருகிறது. 7வது கட்ட பேச்சுவார்த்தை தற்போது சூசுல் செக்டாரில் நடைபெற்று வருகிறது.சீனா படை விலக்கம் கொள்ளாத வரையில் இந்தியாவும் படைகளை திரும்ப பெறாது. தற்போது தான் சீனா மேலதிக பிரிகேடு ஒன்றை வடக்கு பங்கோங் பகுதிக்கு அனுப்பியுள்ளது.இவர்கள் பிங்கர் பகுதிகளில் பணியில் இருக்கும் வீரர்களுக்கு மாற்றாக நிலைநிறுத்தப்படுவர்.வீரர்கள் சோர்வடையாமல் இருக்க […]
Read Moreதிங்கள் அன்று சுமார் 800கிமீ செல்லக்கூடிய நிர்பயா க்ரூஸ் ஏவுகணையை ஒடிசா கடலோர பகுதியில் டிஆர்டிஓ சோதனை செய்தது.ஆனால் ஏவிய சில நிமிடத்திலேயே சோதனை நிறுத்தப்பட்டது. ஏவிய பிறகு ஏவுகணையில் தொழில்நுட்ப கோளாறு உணரப்பட்டதால் சோதனை எட்டு நிமிடத்திற்கு பிறகு நிறுத்தப்பட்டது. கடைசி 35 நாட்களில் டிஆர்டிஓ நடத்தும் பத்தாவது ஏவுகணை சோதனை இதுவாகும்.சீனா எல்லையில் பிரச்சனை செய்து வரும் வேளையில் இந்த தொடர்சோதனைகளை டிஆர்டிஓ செய்து வருகிறது. மனம் தளராத டிஆர்டிஓ இன்னும் சில மாதங்களில் […]
Read Moreஸ்ரீநகர் அருகே ராம்பஹ் பகுதியில் பாதுகாப்பு படை வீரர்களுக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற சண்டையில் இரு பயங்கரவாதிகளை வீழ்த்தியுள்ளனர் இராணுவ வீரர்கள். பயங்கரவாதிகள் இருப்பு குறித்து பாதுகாப்பு படைகளுக்கு கிடைத்த தகவல்படி அங்கு தேடுதல் வேட்டையில் வீரர்கள் ஈடுபட்டனர். தேடுதல் வேட்டை சண்டையாக மாற தற்போது இரு பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளனர்.தற்போது தேடும் பணி நடைபெற்று வருகிறது.
Read Moreஇந்திய சீன எல்லைப் பிரச்சனை காரணமாக ஏழாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று சூசுல் செக்டாரின் சீனப்பகுதியில் நடைபெறுகிறது.12 மணிக்கு தொடங்க உள்ள இந்த பேச்சுவார்த்தையில் இந்திய குழுவிற்கு கார்ப்ஸ் கமாண்டர் லெப் ஜென் ஹரிந்தர் சிங் தலைமை தாங்குகிறார். வெளியுறவு அமைச்சகத்தின் இணை செயலர் நவீன் ஸ்ரீவத்சவா அவர்களும் இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள உள்ளார்.லெப் ஜென் ஹரிந்தர் சிங் கலந்து கொள்ள உள்ள கடைசி பேச்சுவார்த்தை இதுதான்.இதன் பிறகு அவரது இடத்தை லெப் ஜென் பிஜிகே […]
Read Moreஇராணுவ அமைச்சர் இராஜ்நாத் சிங் அவர்கள் இன்று முக்கிய 44 பாலங்களை திறந்து வைக்க உள்ளார். எல்லைச் சாலைகள் அமைப்பு கட்டிய இந்த பாலங்களை வீடியோ கான்பெரன்ஸ் மூலமாக திறந்து வைக்கிறார் அமைச்சர் இராஜ்நாத் சிங். 7 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் இந்த பாலங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவற்றுள் அதிகபட்சமாக ஜம்மு காஷ்மீர் யூனியன் பிராந்தியத்தில் பத்து பாலங்களும் ,லடாக் பிராந்தியத்தில் 7 பாலங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதற்கு பிறகு ஹிமாச்சலில் 2 முக்கிய பாலங்களும்,பஞ்சாபில் நான்கும்,உத்ரகண்டில் எட்டு பாலங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. […]
Read More