1 min read
10கிமீ தூரம் செல்லும் டேங்க் எதிர்ப்பு ஏவுகணை
பத்து கிமீ தூரம் செல்லும் வானில் இருந்து ஏவக்கூடிய புதிய டேங்க் எதிர்ப்பு ஏவுகணையை டிஆர்டிஒ இன்னும் இரு மாதங்களில் சோதனை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சீனாவுடனான எல்லை மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில் டிஆர்டிஒ தொடர் ஏவுகணை சோதனைகளில் ஈடுபட்டு வருகிறது.
Sant எனப்படும் இந்த ஏவுகணை சோதனை முடிவுக்கு பிறகு மி-35 தாக்கும் வானூர்தியில் இணைக்கப்பட உள்ளது.இந்த ஏவுகணை உதவியுடன் மி-35 தாக்கும் வானூர்தி பத்து கிமீ தொலைவில் உள்ள கவச வாகனங்களை அழிக்க முடியும்.
தற்போது மி-35ல் உள்ள Shturm ஏவுகணை ஐந்து கிமீ தூரம் வரும் கவச வாகனங்களை மட்டுமே தாக்கும்.மி-35 வானூர்தியில் இருந்து இந்த ஏவுகணையை சோதனை செய்ய தேவையான வேலைப்பாடுகள் நடைபெற்று வருகிறது.
சில தொடர் சோதனைகளுக்கு பின் இந்த ஏவுகணை படையில் இணைக்கப்படும்.