Breaking News

Day: October 5, 2020

பாக் தாக்குதலில் இராணுவ அதிகாரி வீரமரணம்

October 5, 2020

ஜம்மு காஷ்மீரின் ராஜோரி மாவட்டத்தில் நௌசேரா செக்டாரில் பாக் படைகள் அத்துமீறி துப்பாக்கி சூடு நடத்தின.இந்த தாக்குதலில் இந்திய இராணுவத்தின் ஜேசிஓ வீரமரணம் அடைந்துள்ளார். திங்கள் மாலை 6.30 மணிக்கு எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே உள்ள பாபா கோரி,கல்சியான் ஆகிய இடங்களை குறிவைத்து பாக் படைகள் கடும் தாக்குதல் நடத்தின. இராணுவ நிலைகள் தவிர பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளை குறிவைத்தும் பாக் படைகள் தாக்குதல் நடத்தின. இதற்கு இந்திய இராணுவம் கடும் பதிலடி வழங்கி வருகிறது.

Read More

மேலதிக ரபேல் அல்லது புதிய விமானங்கள் ? விமானப்படை சூசகம்

October 5, 2020

மேலதிக இரு ஸ்குவாட்ரான்கள் ரபேல் விமானங்கள் வாங்குவது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக விமானப்படை தளபதி பதாரியா அவர்கள் முதல் முறையாக கூறியுள்ளார். ஆனால் தற்போது புதிய 83 தேஜஸ் மார்க்1ஏ விமானங்களுக்கான ஆர்டர் விரைவில் வெளியாகும் என விமானப்படை தெளிவாக கூறியுள்ளது.அதன் பிறகு பலபணி போர்விமானங்கள் மேக் இன் இந்தியா திட்டத்தில் வாங்கப்பட உள்ளது.அதன் பிறகு இந்தியாவின் ஐந்தாம் தலைமுறை விமானமான ஏஎம்சிஏ பெறப்படும் என விமானப்படை கூறியுள்ளது.

Read More

இருமுனை போரை எதிர்கொள்ள தயாராக உள்ளோம்: விமானப்படை

October 5, 2020

சீனாவுடனான மோதல் நடைபெற்று வரும் வேளையில் எல்லையில் எந்த முனையில் இருந்தும் வரும் ஆபத்துக்களை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளதாக கூறியுள்ளார். பேச்சுவார்த்தைகளை பொறுத்து தான் இது அமையும்.தற்போது எல்லையில் இருந்து படைகளை பின்வாங்கச்செய்யும் நோக்கில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என விமானப்படை தளபதி பதாரியா கூறியுள்ளார். அடுத்த மூன்று மாதங்கள் எவ்வாறு இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் அடுத்த மூன்று மாதங்களுக்கு குளிர் இருக்கும்.அவற்றை எதிர்கொள்ள படைகள் தயார் நிலையில் உள்ளன.அதற்கு பின் […]

Read More

ஸ்மார்ட் என்ற ஹைபிரிட் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை

October 5, 2020

சூப்பர்சோனிக் மிசைல் அசிஸ்டட் ரிலீஸ் ஆப் ட்ர்பிடோ அதாவது சுருக்கமாக ஸ்மார்ட் எனப்படும் ஏவுகணையை இன்று வெற்றிகரமாக டிஆர்டிஓ சோதனை செய்துள்ளது. ஒடிசா கடற்கரையோர வீலர் தீவுப்பகுதியில் இருந்து இந்த ஏவுகணை அமைப்பு வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.சோதனையின் போது ஏவுகணையின் தூரம்,உயர அளவு போன்ற அனைத்து விசயங்களும் கண்காணிக்கப்பட்டன. ஏவுகணை துணையுடன் இயங்கக்கூடிய இலகுரக நீர்மூழ்கி எதிர்ப்பு டோர்பிடோ அமைப்பு தான் இந்த ஸ்மார்ட் ஹைபிரிட் அமைப்பு.சாதாரண டோர்பிடோக்கள் செல்லும் தூரத்தை விட இந்த ரக டோர்பிடோக்கள் […]

Read More

காஷ்மீரின் பாம்போரில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது தாக்குதல்

October 5, 2020

ஸ்ரீநகரின் புறப்பகுதியில் பாம்போர் எனும் பகுதியில் ரோந்து சென்ற 110வது பட்டாலியன் சிஆர்பிஎப் மீது பயங்கரவாதிகள் தாக்கியதில் 2 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். இந்த தாக்குதலில் மூன்று வீரர்கள் காயமடைந்துள்ளனர்.காயமடைந்த வீரர்கள் 92வது தள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். தற்போது இராணுவத்தின் 50வது இராஷ்டீரிய ரைபிள்ஸ் மற்றும் காவல் துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Read More

இரஷ்யாவிடம் இருந்து இலகுரக டேங்குகள் வாங்க பேச்சுவார்த்தை

October 5, 2020

கிழக்கு லடாக் பகுதி போன்ற உயர் மலை பகுதியில் போரிட ஏற்ற இலகுரக டேங்குகளை இரஷ்யாவிடம் இருந்து பெற பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. Sprut SDM1 என்ற இலகுரக டேங்குகளை அவசரமாக பெறுவது குறித்து பேச்சுவார்த்தை கடந்த ஜீலை முதல் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. சீன எல்லையில் மோதல் ஏற்பட தொடங்கிய பிறகு இது போன்ற டேங்குகளுக்கான அவசர தேவை உணரப்பட்டது.சீனாவும் டி-15 இலகு ரக டேங்குகளை தற்போது எல்லையில் நிலைநிறுத்தியுள்ளது. இந்த புதிய […]

Read More

கஷ்கர் வான் தளத்தில் குண்டுவீசு விமானங்களை குவிக்கும் சீனா

October 5, 2020

காரகோரம் பகுதியில் இருந்து வெறும் 475கிமீ தொலைவில் சீனாவின் ஜின்ஜியாங் பகுதியில் உள்ள கஷ்கார் விமானத் தளத்தில் போர்விமானங்கள் சகிதம் பரப்பரப்பான சூழ்நிலை நிலவுகிறது.சீனாவின் குண்டுவீசு விமானமான H-6 இந்த தளத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்திய சீனா பிரச்சனை தொடங்கியது முதல் இந்த கஷ்கர் தளம் முக்கியமாக பேசப்பட்டு வருகிறது.முதல் இரு H-6 குண்டுவீசு விமானங்கள் கடந்த ஜீன் மாதம் முதலே இங்கு நிலைநிறுத்தப்பட்டிருந்தது. தற்போது வெளியான செயற்கைகோள் படங்கள் வழியாக இந்த இரு H-6 விமானங்களும் KD-63 […]

Read More

பயங்கரவாத தாக்குதலில் அஸ்ஸாம் ரைபிள்ஸ் வீரர் வீரமரணம்

October 5, 2020

அருணாச்சல பிரதேசத்தில் அஸ்ஸாம் ரைபிள்ஸ் வீரர்கள் சென்ற வாகனத்தை பயங்கரவாதிகள் தாக்கியதில் ஒரு அஸ்ஸாம் ரைபிள்ஸ் வீரர் வீரமரணம் அடைந்தார்.ஒரு வீரர் படுகாயம் அடைந்துள்ளார்.பயங்கரவாதிகளை தேடும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. அருணாச்சல பிரதேச மாநில மியான்மர் எல்லையில் சில மாவட்டங்களில் பயங்கரவாத சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.என்எஸ்சிஎன்-ஐஎம் என்ற பயங்கரவாத இயக்கம் செயல்பாட்டில் உள்ளது.

Read More

போரை இணைந்து சந்திக்க தயாராகும் இராணுவம் மற்றும் விமானப்படை

October 5, 2020

இந்திய-சீன மோதல் தற்போது ஆறாவது மாதமாக தொடரும் நிலையில் வர உள்ள அனைத்தையும் இந்திய இராணுவம் மற்றும் விமானப்படை இணைந்து எதிர்கொள்ள தயாராக உள்ளன. சீன எல்லையில் முன்னனி நிலைகளில் உள்ள வீரர்களுக்காக ரேசன் மற்றும் இதர பொருள்களுடன் தொடர்ந்து விமானப்படையின் போர்குதிரைகளான சி-17,ஐஎல்-76,சி-130ஜே ஆகியவை லேக்கு கொண்டு சென்ற வண்ணம் உள்ளன. இராணுவத்தின் எந்த தேவையையும் உடனடியாக தீர்த்து இராணுவத்திற்கு பக்க பலமாக இருக்க விமானப்படை தலைமை தனது வீரர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. தற்போதுள்ள இராணுவ தளபதி […]

Read More