
ரோடங் டனல் கட்டுமானம் முடிவு பெற்றுள்ளது.இதன் மூலம் 475கிமீ நீள மனாலி-கெய்லோங்-லே தேசிய நெடுஞ்சாலையை இனி இந்திய இராணுவ படைகள் வருடம் முழுதும் உபயோகிக்க முடியும்.
இந்த சுரங்க பாதை மூலம் இந்திய இராணுவம் எல்லையின் மிக அருகே டி-90 மற்றும் இன்பான்ட்ரி காம்பட் வாகனங்களை நகர்த்த முடியும்.
வரும் அக்டோபர் 3 அன்று பிரதமர் நரேந்திர மோடி இந்த சாலையை திறந்து வைக்க உள்ளார்.9.2கிமீ நீளமுள்ள இந்த சாலை கடல்மட்டத்தில் இருந்து 3000மீ உயரத்தில் கட்டப்பட்டுள்ளது.
4000கோடிகள் செலவில் எல்லை சாலைகள் அமைப்பு இந்த வேலையை முடித்துள்ளன.