படைகளை வெளியேற்ற சொல்லி சீனா ஏன் கத்தி புலம்புகிறது ?

படத்தை நன்றாக பாருங்கள்….ஹெட்மெட் டாப் மற்றும் பிளாக் டாப் மலைப் பகுதிகளை இந்திய படைகள் கைப்பற்றி உள்ளதால் சூசுல் செக்டாரில் எதிர்புறம் உள்ள அனைத்து சீன நிலைகளையும் இந்தியப் படைகளால் நன்கு கவனிக்க முடியும்…சீன நடமாட்டத்தை காணவும் முடியும்.இந்த படைகளுக்கு ஆதரவாக பின்புறம் இந்தியாவின் ஆர்டில்லரி மற்றும் டாங்க் பிரிவுகள் நிறுத்தப்பட்டுள்ளன.மேலும் சற்று தள்ளி ரெகின் லா என்ற மலைப் பகுதியும் இந்திய படைகள் கட்டுப்பாட்டில் உள்ளது.இங்கிருந்தும் மற்ற சீன நிலைகளை கண்காணிக்க முடியும்….சீனப்படைகள் எல்லை நோக்கி நகர்ந்தால் பிளாக் டாப் மற்றும் ரெகின்லா ஆகிய இரு பகுதியில் இருந்தும் இரு முனைகளிலும் சீனாவை தாக்க இவற்றுக்கு இடையே டேங்க் படைப்பிரிவு கொண்டு சீன டேங்க் படையை எதிர்கொள்ளலாம்.

2)மேலும் ஸ்பங்குர் இடை (கேப் ) வழியாக தான் எத்தனை ஆயிரம் சீனப்படைகளாக இருந்தாலும் இந்திய எல்லைக்குள் நுழைய முடியும்.ஆனால் பிளாக் டாப் நமது கட்டுப்பாட்டில் இருப்பதால் நம்மால் சீன நடமாட்டத்தை கணிக்க முடியும்..அவர்கள் அந்த இடை வழியாக நுழைய முயன்றால் இந்தியா கடும் ஆர்டில்லரி தாக்குதலை சீனப்படைகள் மீது நடத்தும்.

3)ஆக 29/30 நடந்த ஆக்சனில் இந்திய படைகள் சீன ஊடுருவலை முறியடித்து வியூக முக்கியத்துவம் வாய்ந்த மலைகளில் தங்களை வலுப்படுத்தியுள்ளன.மேலும் தெற்கு பங்கோங்கில் நமது கை ஓங்கியே உள்ளது.அதாவது நமக்கு சாதகமான நிலை.

4)ஏழு சீனத் தளங்கள் முழுமையாக இந்திய ஆர்டில்லரி தாக்குதல் வளையத்தில் உள்ளன.சீனா அசம்பாவிதம் செய்ய முயன்றால் ஆர்டில்லரிகளும் ராக்கெட் படைகளும் தனது பணியை செய்யும்.

5) மேலும் போர் வெடித்தால் அங்கிருக்கும் சீன டேங்குகளை நமது படைகள் எளிதாக அடிக்கும்.உயர் மலைப் பகுதியில் இருந்து டேங்க் எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் ஆர்டில்லரிகளை எளிதாக வீசி நமது படைகள் தாக்கும்.

6)மேலும் சீனாவின் துப்பாக்கி நிலைகள் மற்றும் சப்ளை லைன்களை இந்தியா போர் தொடங்கிய அந்த கோல்டன் மினிட் நேரத்தில் அழிக்கலாம்.தவிர சீனாவின் சிறு அசைவையும் 100% இந்திய படைகளால் காண முடியும்.

7)சிறப்பு முன்னனி படைப் பிரிவுகளை இந்தியா களமிறக்கியுள்ளது.